×

ஆலத்தூர், ஆர்டிமலை ஊராட்சி பகுதிகளில் புதிய தார்சாலை, ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி துவக்கம்

தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் நெய்தலூர் காவல்காரன்பட்டி சாலையில் இருந்து ஆலத்தூர் அரிசனகாலனி சுடுகாடு வரை புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த பகுதி மக்களின் கோரிக்கையை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஆலத்தூர் ஊராட்சியில் நெய்தலூர் காவல்காரன்பட்டி சாலையில் இருந்து ஆலத்தூர் அரிசனகாலனி சுடுகாடு வரை புதிய தார்சாலை அமைக்க 350 மீட்டர் தூரத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. இதனை அடுத்து ஆலத்தூரில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால் தலைமையில் நடந்தது. தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய ஆணையர்கள் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு புதிய பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் சின்னையன், சுமதி சிவப்பிரகாசம், மாவட்ட பிரதிநிதி சந்திரன். ஒன்றிய பொருளாளர் ராமு, இளைஞரணி விஜயன், ஒன்றிய துணை செயலாளர் ரவிசந்திரன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி, நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் ஆர்டிமலை ஊராட்சி வாலியம்பட்டியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜையை எம்எல்ஏ மாணிக்கம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆர்டிமலை ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் பாலமூர்த்தி தலைமை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.தனியார் பொறியியல் கல்லூரியில் லேப்டாப் திருடியவர் கைது வேலாயுதம்பாளையம்: தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் ரூ.3லட்சம் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் செல்போனை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே அய்யமேட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). இவர் சேலத்தில் செல்போன் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் தளவாபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு வகுப்பறையில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2 லேப்டாப், 15 செல்போன்கள் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து கல்லூரியின் செக்யூரிட்டி பாஸ்கரன் அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Tags : Alatur ,Ardimalai ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்: கலெக்டர் அதிரடி உத்தரவு